பஞ்சப்பட்டியில் விவசாயிகள் சாலைமறியல்


பஞ்சப்பட்டியில் விவசாயிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 Feb 2021 5:31 AM IST (Updated: 7 Feb 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சப்பட்டியில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

லாலாபேட்டை,

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டத்திருந்தங்களில் உள்ள அடக்கு முறைகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகயை வலியுறுத்தி லாலாபேட்டை அருகே உள்ள பஞ்சப்பட்டி கடைவீதியில் நேற்று அகில இந்திய போராட்டக்குழு சார்பில் சாலைமறியல் நடந்தது. இதற்கு பஞ்சப்பட்டி வாழ்க விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தலைமை தாங்கினார். இதில் பெண்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 23 விவசாயிகளை லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர்.

Next Story