நெல்லையில் இந்து முன்னணியினர் சாலை மறியல்


நெல்லையில் இந்து முன்னணியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Feb 2021 5:39 AM IST (Updated: 7 Feb 2021 5:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை,

திருச்செந்தூரில் மாசி தேரோட்ட திருவிழாவை நடத்தக்கோரி போராடிய இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகில் நெல்லை மாநகர இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமை தாங்கினார்.

 மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட துணை தலைவர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், ராஜசெல்வம், நமச்சிவாயம், மேலப்பாளையம் மண்டல தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திசையன்விளை காமராஜர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விக்னேஷ், கோட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, பொதுச்செயலாளர் மகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story