காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
அரியலூர், திருமானூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூர்,
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் அக்கட்சியினர் மார்க்கெட் தெருவில் ஊர்வலமாக வந்து சாலை மறியல் செய்தனர். அவர்களுடன், அரியலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.
இதேபோல் திருமானூர் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருமானூரில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story