காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் மோதல்; பெண் சாவு
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் பகுதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது 25), இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணான மைதிலி (45) என்பவரை அழைத்து கொண்டு மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அய்யங்கார்குளம்-மோரணம் சாலை பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.
சாவு
இதில் படுகாயம் அடைந்த மைதிலி சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மங்கையர்கரசி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story