தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 12:54 AM IST (Updated: 9 Feb 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்:
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து 5 விவசாயிகள் சென்று கலெக்டரிடம், கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தனர்.

Next Story