சேலம் மாவட்டத்தில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்


சேலம் மாவட்டத்தில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
x
தினத்தந்தி 9 Feb 2021 4:41 AM IST (Updated: 9 Feb 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

நெல்கொள்முதல் நிலையங்கள்
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று சேலம் மாவட்டத்தில் 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி எடப்பாடி தாலுகா பூலாம்பட்டியிலும், சங்ககிரி தாலுகா தேவூரிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.அதே போன்று டேனிஷ்பேட்டை, இலுப்பநத்தம், புளியங்குறிச்சி, தலைவாசல், புத்திரக்கவுண்டன்பாளையம் ஆகிய இடங்களிலும் திறக்கப்பட்டு உள்ளன. 

விலை நிா்ணயம்
நெல் கொள்முதல் நிலையங்களில்  சன்ன ரகம் ரூ.1888, ஊக்கத்தொகை ரூ.70 என மொத்தம் ரூ.1, 958 விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதே போன்று பொது ரகம் ரூ.1868 ஊக்கத்தொகை ரூ.50 என மொத்தம் ரூ.1, 918 நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.  இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story