மாவட்ட செய்திகள்

காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?வனத்துறையினர் விளக்கம் + "||" + Why cant the wild elephant be trapped

காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?வனத்துறையினர் விளக்கம்

காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?வனத்துறையினர் விளக்கம்
காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன்?
கூடலூர்

3 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க முடியாமல் திணறுவது ஏன் என வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். 

3 பேரை கொன்ற காட்டு யானை

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் தந்தை, மகன் உள்பட 3 பேரை காட்டு யானை மிதித்து கொன்றது. இதையடுத்து அந்த யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். 

ஆனால் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியபோது, அந்த காட்டு யானை ஓட்டம் பிடித்து கேரளாவுக்கு சென்றது. பின்னர் அந்த காட்டு யானை மீண்டும் சேரம்பாடி வனப்பகுதிக்குள் வந்தது. அந்த யானையை பிடிக்க 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட போதிலும் அதை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள். 

இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில் கூறியதாவது:-

விரைவில் பிடித்து விடுவோம் 

3 பேரைக் கொன்ற காட்டு யானையுடன் சில காட்டு யானைகளும் நிற்கிறது. மேலும் காட்டு யானை கூட்டத்தில் ஒரு குட்டி யானையும் உள்ளது. கால்நடை மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்துவதற்காக அருகே செல்லும்போது காட்டு யானைகள் விரட்டுகிறது. 

மேலும் யானை அடர்ந்த புதருக்குள் நிற்பதால் மயக்க ஊசியை இலக்கை நோக்கி செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் கூட்டத்தில் இருந்து அந்த யானையை பிரிக்க திட்டமிடப்பட்டது. இதில் உரிய பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறோம். கண்டிப்பாக விரைவில் பிடித்து விடுவோம். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
காவலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை சேதப்படுத்தியது
2. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானை
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை உலா வந்தது.
3. காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம்
மளுக்கப்பாறை எஸ்டேட்டில் காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
4. மசினகுடி அருகே ஊருக்குள் முகாமிட்ட காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து அழைத்து சென்ற வனத்துறையினர்
மசினகுடி அருகே ஊருக்குள் முகாமிட்ட காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து வனத்துறையினர் அழைத்து சென்றனர்.
5. காட்டு யானை மீது தீப்பந்தம் வீச்சு: கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை
காட்டு யானை மீது தீப்பந்தம் வீசிய வழக்கில் கைதான 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார்.