துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 5:54 PM GMT (Updated: 9 Feb 2021 5:54 PM GMT)

உயர்த்தப்பட்ட கூலி வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாமரைக்குளம்:
அரியலூரில் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யூ.சி. துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித் துறை மாநில நிர்வாக குழு உறுப்பினர் தண்டபாணி தலைமை தாங்கி பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் தனசிங், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் மற்றும் நகராட்சிகளின் துப்புரவு பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் வேலை பார்க்கும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த உயர்த்தப்பட்ட தினக்கூலியை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அரசு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். நிரந்தர துப்புரவு தொழிலாளர்களுக்கு சேமநலநிதி வட்டியுடன் கூடிய இருப்புக்கணக்கு கொடுக்க வேண்டும். பணிக்காலத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு சேரவேண்டிய பணப்பயன்களை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story