மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 11 Feb 2021 1:55 AM IST (Updated: 11 Feb 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம் கிராமம், செட்டிகரையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீதேச மாரியம்மன் மற்றும் கர்ப்பக விநாயகர் உள்பட பரிவார ெதய்வங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கோவிலில் யாக சாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜைகள், விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாகனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனம், வேதிகா அர்ச்சனை, திரவிய ஹோமம், புர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. பின்னர் நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாக பூஜைகள் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
1 More update

Next Story