தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2021 2:29 AM IST (Updated: 11 Feb 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே  வாணத்திரையான்பட்டினம் ஆதிதிராவிடர் காலனி தெரு மக்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு, 98 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை அளந்து தங்களை குடியமர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தினை அரசு அலுவலர்கள் அளந்து குடியமர்த்த வேண்டும் எனக் கோரி உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை உடையார்பாளையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில், வானத்திரையான்பட்டினம் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வி.சி.க. உடையார்பாளையம் பொறுப்பாளர் கவர்னர் நன்றி கூறினார். பின்னர், ஊர்வலமாக சென்று உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு அளித்தனர்.


Next Story