2 ஆயிரம் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதில் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இதையொட்டி தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அதிகாரிகள் மற்றும் போலீசாரின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.
இதில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 71 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து போலீசாருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், தாடிக்கொம்பு ஆகிய 6 இடங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
முதல் நாளான நேற்று ஆயுதப்படை போலீசார் உள்பட மொத்தம் 95 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story