சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம்


சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம்
x
தினத்தந்தி 11 Feb 2021 11:05 PM IST (Updated: 11 Feb 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

தை மாத அமாவாசையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் சன்னதியில் உள்ள மகா பிரத்தியங்கரா தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று மிளகாய் சண்டி யாகம், பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி மிகவும் சிறப்பு வாய்ந்த தை மாத அமாவாசையை முன்னிட்டு பிரமாண்ட சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் மூட்டை, மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்டினர். மேலும் மஞ்சள், குங்குமம், முக்கனிகள், வேர்கள், சேலை ஆகியவற்றையும் யாக குண்டத்தில் போட்டனர். பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story