வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டது


வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டது
x
தினத்தந்தி 12 Feb 2021 12:03 AM IST (Updated: 12 Feb 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டது.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே கல்லங்குறிச்சி, கடுகூர் கோப்பிலியன்குடிகாட்டை இணைக்கும் பிரிவு பாதை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. வளைவு பகுதி, பள்ளி பகுதிகளில் விபத்தை தடுக்கும் பொருட்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படாததால் இரவு நேரங்களில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வேகத்தடைகளில் பஸ்கள் செல்லும்போது பஸ்சில் இருக்கும் பயணிகள் காயம் அடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தியில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சூப்பிரண்டு சீனிவாசனுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

Next Story