ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடந்த இரட்டைக்கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம்


ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடந்த இரட்டைக்கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 12 Feb 2021 3:24 AM IST (Updated: 12 Feb 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடந்த இரட்டைக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடந்த இரட்டைக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இரட்டைக்கொலை
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரட்டைக்கொலை சம்பவம் நடந்தது. இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய குணா என்கிற குணசேகரன், கலை என்கிற கலைச்செல்வன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். 
இவர்களின் உடல்கள் போலீசாரால் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 
பின்னர் நேற்று உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
இதற்கிடையே ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வன் (டவுன்), ரவிக்குமார் (சூரம்பட்டி), பாலமுருகன் (தாலுகா) ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். 
மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
விசாரணை
கொலை செய்யப்பட்ட குணசேகரன், கலைச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இதுபோல் குணசேகரன், கலைச்செல்வன் ஆகியோர் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள்.
இவர்களின் செயலால் பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களை சார்ந்தவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 
இதுதொடர்பாக சிலரை போலீசார் பிடித்து தனி விசாரணை நடத்தி உள்ளனர். எனவே விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story