சாலையோர கடையில் டீ குடித்த முதல் அமைச்சர்


சாலையோர கடையில் டீ குடித்த முதல் அமைச்சர்
x
தினத்தந்தி 11 Feb 2021 10:44 PM GMT (Updated: 11 Feb 2021 10:44 PM GMT)

சாலையோர கடையில் டீ குடித்த முதல் அமைச்சர்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். காங்கேயத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட முதல்-அமைச்சர் தாராபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவந்தார். தாராபுரம் பைபாஸ் ரோட்டில் வந்தபோது திடீரென்று அங்கு சாலையோரம் இருந்த டீக்கடைக்கு சென்றார். பின்னர் அங்கு அமர்ந்து டீ குடித்தார். அதன்பின்னர் அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிரு‌‌ஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர். டீக்கடையில் முதல்-அமைச்சர் டீ குடிப்பதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து ஏராளமானோர் தங்களது செல்போனில் முதல்-அமைச்சர் டீக்கடையில் இருக்கும் காட்சியை படம் பிடித்தனர்.


Next Story