வாலாஜாபாத்தில், மதுக்கடையின் பூட்டை உடைத்து திருட்டு
வாலாஜாபாத்தில் மதுக்கடையின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி வல்லப்பாக்கம் பகுதியில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மதுக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது குறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் அருகில் உள்ள தோப்பு பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைத்திருந்த மதுபான பாட்டில்களை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மதுக்கடையில் ஏற்கனவே 2 முறை கொள்ளை முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story