வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.82 லட்சம் மோசடி - சென்னையில் வங்கி உதவி மேலாளர் கைது
வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.82 லட்சம் மோசடி செய்த சென்னை வங்கி உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை எழும்பூரில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியில், உதவி மேலாளராக வேலை செய்தவர் மாதவன் (வயது 35). இவர் பங்கு சந்தையில் ஏராளமான பணத்தை முதலீடு செய்து நஷ்டம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடனில் சிக்கி தவித்துள்ளார். அதில் இருந்து மீள்வதற்காக தான் வேலை பார்த்த வங்கி கிளையின் வாடிக்கையாளர் ராமகிருஷ்ணனின் கணக்கில் இருந்து ரூ.82 லட்சத்தை தனது கணக்கிற்கு மாற்றி மோசடி செய்து விட்டதாக, மாதவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வங்கி உதவி மேலாளர் மாதவன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story