சென்னை தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தம், பதிவு செய்யும் முகாம் நாளை நடக்கிறது
இந்திய தபால் துறை சார்பில் ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடக்கிறது.
புதியதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, செல்போன் எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15-வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தபால் நிலையங்களில் நடக்கிறது.
சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், பார்த்தசாரதி கோவில், சேப்பாக்கம், கோபாலபுரம், சென்னை பல்கலைக்கழகம், மந்தைவெளி, அக்கவுண்டன்ட் ஜெனரல் தபால் நிலையம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சூளைமேடு, கிரீம்ஸ் சாலை, இந்தி பிரசார சபா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, தியாகராயநகர் வடக்கு ஆகிய தபால் நிலையங்களில் நடக்கிறது. திருத்தம் செய்ய ரூ.50 சேவை கட்டணம் வசூலிக்கப்படும். புதியதாக ஆதார் பதிவு செய்ய சேவைக்கட்டணம் வழங்க வேண்டியதில்லை.
மேற்கண்ட தகவல்களை சென்னை மத்திய கோட்ட தபால் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story