திடீரென முறிந்து விழுந்த மின்கம்பங்கள்


திடீரென முறிந்து விழுந்த மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 12 Feb 2021 3:18 PM GMT (Updated: 12 Feb 2021 3:18 PM GMT)

நிலக்கோட்டை அருகே திடீரென முறிந்து விழுந்த மின்கம்பங்கள் பொதுமக்கள் தப்பியோட்டம்

நிலக்கோட்டை:


நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியில் காளி, பகவதிஅம்மன் கோவிலில் இருந்து தெற்கு தெரு வரை மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து இருந்ததால் அவற்றை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்ைக விடுத்து இருந்தனர். 

எனினும் மின் கம்பங்கள் மாற்றப்படாமல் இருந்தன. 


இந்நிலையில் நேற்று காலை திடீரென 4 மின்கம்பங்கள் அடுத்தடுத்து கீழே முறிந்து விழுந்தன. 

இந்த சமயத்தில் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், டீக்கடைகளில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் சுதாரித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

 
இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தலைமையில் பணியாளர்கள் விரைந்து வந்து நடுரோட்டில் கிடந்த மின் கம்பங்களை அகற்றினார்கள். 


பின்னர் புதிதாக மின் கம்பங்கள் நடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்தது. மின்கம்பங்கள் திடீரென முறிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

----


Next Story