அரசு கல்லூரியில் கண்காட்சி


அரசு கல்லூரியில் கண்காட்சி
x
தினத்தந்தி 13 Feb 2021 12:38 AM IST (Updated: 13 Feb 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நடந்தது.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஹேமலதா தலைமை தாங்கினார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) மணிகணேஷ் வரவேற்று பேசினார்.
இதையொட்டி நடைபெற்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்து கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்;. அதனைத்தொடர்ந்து தொழில்நெறி வழிகாட்டிக் கையேட்டினை சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் வெளியிட அதை கல்லூரி முதல்வர் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு அலுவலர் (தொழில் வளர்ச்சி) ராஜலட்சுமி, கல்லூரியின் வணிகவியல் உதவி பேராசிரியர் செண்பகநாதன், தாட்கோ மாவட்ட மேலாளர் முத்துசெல்வி ஆகியோர் பேசினார்கள். முடிவில் வணிகவியல் உதவி பேராசிரியர் கேத்தராஜ் நன்றி கூறினார்.

Next Story