அம்மா சாலையில் இரும்பு கம்பி


அம்மா சாலையில் இரும்பு கம்பி
x
தினத்தந்தி 12 Feb 2021 7:46 PM GMT (Updated: 12 Feb 2021 7:46 PM GMT)

அம்மா சாலை அமைக்கும் பணியின் இடையே ரெயில்வே துறை சார்பில் இரும்பு கம்பி நட்டு வைக்கப்பட்டது.

கரூர்
அம்மா சாலை
கரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் அம்மா சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் குளத்துப்பாளையம் குகைவழிப்பாதை அருகே நேற்று காலை ரெயில்வே துறையினர், குறிப்பிட்ட தூரம் வரை ரெயில்வே துறைக்கு சொந்தமான இடம் எனக்கூறி அந்த சாலை பணிகளை தடுக்கும் வகையில் இரும்பு கம்பிகளை நட்டு வைத்திருந்தனர்.
அமைச்சர் பேச்சுவார்த்தை
 இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி, நகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் ரெயில்வேதுறை அதிகாரியிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ரெயில்வே துறையினர் சாலையில் நட்டு வைத்த இரும்பு கம்பிகளை உடனடியாக அகற்றிக் கொண்டனர்.

Related Tags :
Next Story