ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2021 7:56 PM GMT (Updated: 12 Feb 2021 7:56 PM GMT)

காரைக்குடியில் அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

காரைக்குடி,

அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் சார்பில் சிமெண்டு, இரும்பு கம்பி மற்றும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதனையொட்டி காரைக்குடியில் செட்டிநாடு மையத்தின் சார்பில் ஐந்து விளக்கு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கட்டுனர் சங்க செட்டிநாடு மையத்தின் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் சிவில் என்ஜினியர் அமைப்பின் தலைவர் பெருமாள், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தார் ஆனந்திடம் வழங்கினர்.


Next Story