ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதிய தனியார் பஸ்
ஈரோடு ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் தனியார் பஸ் மோதியது.
ஈரோடு,
ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. அங்கு கொல்லம்பாளையத்தில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட உயரம் குறைந்த வாகனங்கள் மேல்பகுதியின் வழியாகவும், பஸ்கள், லாரிகள் போன்ற பெரிய வாகனங்கள் கீழ் பகுதியின் வழியாகவும் செல்கின்றன. மேல் பகுதியில் உள்ள நுழைவு பாலத்தில் வாகனங்கள் மோதி விடாமல் இருக்க தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறியரக வாகனங்கள் செல்லக்கூடிய வழியில் தனியார் சொகுசு பஸ்சை அதன் டிரைவர் ஓட்டி வந்தார். இதனால் பாலத்தின் முன்பு உள்ள தடுப்புச்சுவரில் பஸ் மோதி நின்றது. இந்த விபத்தில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Related Tags :
Next Story