நிதி நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி செய்தார்


நிதி நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி செய்தார்
x
தினத்தந்தி 13 Feb 2021 2:07 AM IST (Updated: 13 Feb 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

மதுரை,

மதுரை மகாத்மா காந்திநகரை சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 32). இவர் பை-பாஸ்ரோடு பொன்மேனி பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.  பணி தொடர்பாக மேல் அதிகாரிகள் அவரை திட்டினர். இதனால் மனவருத்தம் அடைந்த மனோஜ்குமார், நிறுவனம் அமைந்துள்ள கட்டிடத்தின் 6-வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார். மேலும் தன்னை யாராவது காப்பாற்ற நினைத்தால் மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று மிரட்டியதால் யாரும் மாடிக்கு செல்ல வில்லை. இதுகுறித்து குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திடீர்நகர் தீயணைப்புத்துறை அதிகாரி வெங்கசேடன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாடிக்கு சென்று அந்த வாலிபரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள் மனோஜ்குமாரை மீட்டு கீழே அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்பு எஸ்.எஸ்.காலனி போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story