வெடிவிபத்து நடந்ததற்கான காரணம் என்ன?
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்பே வெடிவிபத்துக்கான காரணம் பற்றிய முழு விவரங்கள் தெரிவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர்,
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்பே வெடிவிபத்துக்கான காரணம் பற்றிய முழு விவரங்கள் தெரிவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெடிவிபத்து
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த அனைவருக்கும் சிவகாசி, சாத்தூர் மற்றும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிவிபத்துக்கான காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்த வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்த பட்டாசு ஆலை சிலருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கலாம் என்றும் இத்தகைய கடுமையான விதிகளை பின்பற்றாததால் விபத்து நடந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
அறிக்கை
இதற்கிடையில் பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மதியம் உணவு இடைவேளையின் போது உணவு அருந்துவதற்காக அவசரம், அவசரமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை கீழே வீசி எறிந்ததால் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து நடந்திருக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும் இந்த விபத்து குறித்து உத்தரவிடப்பட்டு உள்ளது விசாரணைக்கு பின்பே வெடிவிபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன் பின்னர் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story