சேலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை


சேலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2021 2:41 AM IST (Updated: 13 Feb 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தனியார் மண்டபத்தின் கழிப்பறையில் சேலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்:
ரியல் எஸ்டேட் அதிபர் 
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 51). இவர் சேலம் தாதக்காபட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்

. அவருக்கு பிரியா என்ற மனைவியும், கவின், சுதர்சன் ஆகிய மகன்களும் உள்ளனர். மேலும் பாண்டியராஜன் சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் அவருக்கு பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டது.

 அதை சரிசெய்வதற்கு நண்பர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர். 

ஆனால் அவர் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்தார்.
சொந்த ஊருக்கு வந்தார் 
எனவே சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். 
அப்போது நிலத்தை வெறுமனே விற்காமல், வீட்டுமனைகளாக பிரித்து விற்றால் அதிக தொகைக்கு விற்று விடலாம். 

அதன்மூலம் கடனை திரும்ப கொடுத்து விட்டு, தொழிலை மீண்டும் தொடரலாம் என்று நினைத்தார். ஆனால் நிலத்தை விற்பனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

எனவே, நிலம் விற்பனை செய்வது தொடர்பாக அவர் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். அதன்பின்னர் அவர் சேலத்துக்கு திரும்பி செல்லவில்லை. இதனால் அவருடைய மனைவி பிரியா, கணவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீசில் நேற்று பிரியா புகார் செய்தார்.
கழிப்பறையில் உடல் 
இதைத் தொடர்ந்து பாண்டியராஜனின் செல்போன் செயல்பாட்டை போலீசார் ஆராய்ந்தனர். 

அப்போது திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் பகுதியில் செல்போன் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று மண்டபம் முழுவதும் சோதனையிட்டனர்.
அப்போது பூட்டி கிடந்த ஒரு கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் பார்த்தனர். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பாண்டியராஜன் பிணமாக கிடந்தார். 

மேலும் ரத்தக்கறை படிந்த பிளேடு அருகில் கிடந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தற்கொலை 
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக, திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரை பார்ப்பதற்கு பாண்டியராஜன் வந்துள்ளார். 

அப்போது மனவேதனையில் இருந்த அவர், கழிப்பறைக்குள் சென்று பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.  இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story