அந்தியூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
அந்தியூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே பூதப்பாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் மாத தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தோம். தவணை முழுவதையும் செலுத்தியும் எங்களது பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் பலமுறை கேட்டும் அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே எங்களது பணத்தை மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
Related Tags :
Next Story