சிவகாசி-திருத்தங்கல் இடையே ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்
நிலம் கையகப்படுத்தாமல் சிவகாசி-திருத்தங்கல் இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என திருத்தங்கல் மற்றும் கீழதிருத்தங்கல் சாலையோர கட்டிட உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
விருதுநகர்,
நிலம் கையகப்படுத்தாமல் சிவகாசி-திருத்தங்கல் இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என திருத்தங்கல் மற்றும் கீழதிருத்தங்கல் சாலையோர கட்டிட உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சிறு வியாபாரம்
இதுகுறித்து கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பல ஆண்டுகளாக திருத்தங்கல் மெயின் சாலை ஓரங்களில் நிலங்கள் வாங்கி கட்டிடம் கட்டி திருத்தங்கல் நகராட்சி அனுமதி பெற்று சிறு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் அரசு சார்பில் வருவாய்த்துறை சிவகாசி- திருத்தங்கல் ரெயில்நிலையங்களுக்கிடையில் மேம்பாலம் கட்ட நிலஎடுப்பு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் கண்டிருந்த சர்வே நம்பரில் பல ஏழைக் குடும்பங்கள் வேலை செய்யும் 2 தீப்பெட்டி ஆலைகள் ஆதிதிராவிட குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் திருத்தங்கல் ஊரின் திருத்தங்கல் மெயின் பஜார், கீழதிருத்தங்கல் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் திருத்தங்கல் ஊரின் மெயின் பஜார் நில எடுப்பு செய்யும் இடத்திற்குள் உள்ளது. எங்கள் வாழ்வின் ஆதாரமே எங்கள் வணிக நிறுவனங்களை வைத்து தான் இருக்கிறது. தாங்கள் நில எடுப்பு செய்தால் திருத்தங்கல் பஜாரின் தன்மையை மாற்றிவிடும். எங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். திருத்தங்கல்லுக்கு பாலம் தேவைதான். அதற்கு தேவையான இடம் ெரயில்வே நிர்வாகமிடமும், நகராட்சியிடம் உள்ளது.
ேகாரிக்கை
பொதுமக்கள், வியாபாரிகள், நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய தொழில் பாதிக்கப்படாமல் பாலம் கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தற்போது நெடுஞ்சாலை இருக்கும் இடத்திலேயே பாலம் அமைத்துக் கொடுத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ஆகவே தாங்கள் தயவு செய்து நில எடுப்பு செய்யாமல் ெரயில்வே மேம்பாலம் அமைத்துக்கொடுக்க உத்தரவிடுமாறு வேண்டுகிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story