கோவையில் பேக்கரியில் ரூ.40 ஆயிரம் திருட்டு போனது


கோவையில் பேக்கரியில் ரூ.40 ஆயிரம் திருட்டு போனது
x
தினத்தந்தி 13 Feb 2021 3:52 AM IST (Updated: 13 Feb 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பேக்கரியில் ரூ.40 ஆயிரம் திருட்டு போனது.

போத்தனூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் பொன்னழகன் (வயது 36). இவர் கோவை ஈச்சனாரி-செட்டிப்பாளையம் சாலையில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம், இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை வழக்கம்போல் பேக்கரியை திறப்பதற்காக வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். 

தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மேஜையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.

 இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

 இந்த காட்சிகளை வைத்து பேக்கரியில் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story