காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2021 3:38 AM GMT (Updated: 13 Feb 2021 3:38 AM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் கட்டுமான தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிமெண்டு கம்பி மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், கட்டுமான பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சிவில் என்ஜினீயர் அசோசியேசன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கட்டுமான சங்கம், காஞ்சீபுரம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம், இந்திய தேசிய கட்டிட தொழிலாளர் பேரவை, தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு பழைய பஸ் நிலைய பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story