பழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்


பழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்
x
தினத்தந்தி 13 Feb 2021 11:15 AM GMT (Updated: 13 Feb 2021 11:15 AM GMT)

மாசி மாத பிறப்பையொட்டி பழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்

பழனி:


தமிழ் மாதமான மாசி மாத பிறப்பையொட்டி பழனி மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

பின்னர் ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இதேபோல் பட்டத்து விநாயகர் கோவில், அடிவாரம் பாதவிநாயகர் கோவில்களிலும் மாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.Next Story