கடலில் பாசி சேகரிக்கும் மீனவ பெண்கள்


கடலில் பாசி சேகரிக்கும் மீனவ பெண்கள்
x
தினத்தந்தி 13 Feb 2021 1:52 PM GMT (Updated: 13 Feb 2021 1:52 PM GMT)

ஏர்வாடியில் கடலில் மீனவ பெண்கள் கடல்பாசி சேகரித்து வருகின்றனர்.

கீழக்கரை, 
ஏர்வாடியில் கடலில் மீனவ பெண்கள் கடல்பாசி சேகரித்து வருகின்றனர்.
கடல்பாசி

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதை போல் கடல் நடுவே சென்று கடல்பாசி எடுத்து தொழில் செய்துவரும் மீனவப் பெண்கள். ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள மணல் திட்டுக்கு படகு மூலம் சென்று அதனை சுற்றியுள்ள 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு நடந்து சென்று கடல்பாசி எடுத்து தொழில் செய்து வருகின்றனர். 
இந்த தொழிலில் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். இந்த பகுதியில் சேகரிக்கப்படும் கடல் பாசிகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இந்த பகுதியில் வளரக்கூடிய மரிக்கொழுந்து பாசி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், பக்கோடா பாசி ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்படுகின்றன.
காலை நேரங்களில் கடல் அலைகள் குறைந்து காணப் படுவதால் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே கடல்பாசி சேகரிக்க முடியும். நாளொன்றுக்கு 12 கிலோ முதல் 15 கிலோ வரை கடல் பாசிகளை சேகரிப்பதாக மீனவ பெண்கள் கூறுகின்றனர். 

கடல் புல்

கடல் புல் என்று அழைக்கப்படும் இந்த கடல் பாசி பவளப்பாறை மேல் வளரக் கூடியது. இந்த கடல் பாசியை வெட்ட வெட்ட அதிக அளவில் வளரும். இதனால் கடல் பாசிகள் அதிகரித்து மீனவ பெண்கள் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் பவளப்பாறைகள் வளர்ச்சி அடைந்து சுற்றுச்சூழல் தூய்மை அடைந்து வருவதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர்.

Next Story