ராமநாதபுரத்தில் கடும் பனிப்பொழிவு
ராமநாதபுரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக மார்கழி மாதத்தில் பனியின் தாக்கம் முழுமையாக இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக ராமநாதபுரம், உச்சிப்புளி, பரமக்குடி, ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் பனிப்பொழிவு அதிகாக உள்ளது. குறிப்பாக உச்சிப்புளி முதல் ராமநாதபுரம் வரையிலான பல்வேறு ஊர்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. காலை 9 மணி வரையிலும் பனியின் தாக்கம் இருப்பதால் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வருகின்றன. மாசி மாத பனி மச்சு வீட்டை துளைக்கும் என்பதற்கு ஏற்ப மாதம் பிறந்த முதல்நாளே பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உச்சிப்புளி முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வளர்ந்து நிற்கும் செடிகள் மற்றும் புற்களிலும் பனித்துளிகள் படர்ந்து காட்சிஅளிக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பனி தாக்கம் மிக அதிகமாக இருந்து வருவதால் பெரியவர்கள் மற்றும் ஏராளமான குழந்தைகளும் இருமல், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story