சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது


சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2021 5:02 PM GMT (Updated: 13 Feb 2021 5:02 PM GMT)

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்

சங்கராபுரம், 

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனை  நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால் மற்றும் சவுக்கத்தலி ஆகியோர் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். 

இதில் மோட்டாம்பட்டி சுடுகாடு அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தீர்த்தமலை (வயது 42) சங்கர்பாலன்(26) ஆகியோரை கைது செய்த போலீசாா் இவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் நெடுமானூர் கிராமத்தில் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(41), பச்சையாப்பிள்ளை (50) ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 115 லிட்டர் சாராயத்தையும், வீரியூர் கிராமத்தில் சுடுகாடு அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட்(39) என்பவரை கைது செய்த போலீசார் இவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். 

Next Story