முத்தூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
முத்தூரில் 100 நாள் வேலைத்திட்டம் வழங்க கோரிபொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
முத்தூர், பிப்.14-
காங்கேயம் தாலுகா அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பணி வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்றுகாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பி.செல்லமுத்து தலைமை தாங்கினார். தொடர்ந்து விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஆர்.திருவேங்கடசாமி ஆகியோர் முன்னிலையில் கிராம ஊராட்சி பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு உள்ள 100 வேலை திட்டத்தினை பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கும் வழங்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி இணை செயலாளர் சஞ்சய்குமார், பொருளாதார மேம்பாட்டுக்கான ஆய்வுக்குழு தலைவரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனருமான சி.ரங்கராஜன் பரிந்துரையின்படி பேரூராட்சி பொதுமக்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தினை உடனடியாக வழங்க கோரி பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பி. துரைசாமி, எஸ்.பழனியம்மாள், எம்.சுப்பிரமணி, எஸ்.ராதாகிருஷ்ணன், கே.பழனிசாமி மற்றும் பலர் கலந்துகொணடனர்.
Related Tags :
Next Story