காதலனுடன் விஷம் குடித்த ஆசிரிைய சாவு


காதலனுடன் விஷம் குடித்த ஆசிரிைய சாவு
x
தினத்தந்தி 13 Feb 2021 11:31 PM IST (Updated: 13 Feb 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே காதலனுடன் விஷம் குடித்த ஆசிரிைய பரிதாபமாக இறந்தார். அவரது காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்னிலம்;
நன்னிலம் அருகே காதலனுடன் விஷம் குடித்த ஆசிரிைய பரிதாபமாக இறந்தார். அவரது காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
ஆசிரியை
நாகை மாவட்டம் திருப்புகலூர் அருகே உள்ள புதுக்கடை மேலத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகள் ரேணுகாதேவி (வயது 28). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். 
இவரும், மங்கைநல்லூர் அருகே உள்ள கப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த தனபால் மகன் கோபிநாத்(30) என்பவரும் காதலித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை ரேணுகாதேவி தனது வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ரேணுகாதேவியை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்ல. 
பரிதாப சாவு
இந்த நிலையில் நேற்று காலை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர் ெரயில்வே கேட் அருகே ரேணுகாதேவியும், கோபிநாத்தும் விஷம் குடித்த நிலையில் கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரேணுகாதேவி உயிரிழந்ததும், அவரது காதலன் கோபிநாத் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததும் தெரிய வந்தது. 
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த நன்னிலம் போலீசார் கோபிநாத்தை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த ரேணுகாதேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு காதல் ஜோடி எதற்காக விஷம் குடித்தனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story