ரூ.43 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அதிகாரி ஆய்வு


ரூ.43 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 13 Feb 2021 11:37 PM IST (Updated: 13 Feb 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

பழைய கொள்ளிடம் ஆற்றில் ரூ.43 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுந்ததால் பெராம்பட்டு, மடத்தான்தோப்பு, வேளக்குடி, அகரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.  இதையடுத்து கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று சிதம்பரம் அருகே பெராம்பட்டு-கீழகுண்டலப்பாடி இடையே பழைய கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட தமிழக அரசு ரூ.43 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு  தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை சென்னை .தரக்கட்டுப்பாட்டு தலைமை பொறியாளர் தட்சிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  அப்போது செயற்பொறியாளர்கள் சாம்ராஜ், லெனின், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர்கள் ரமேஷ், முத்துக்குமார், ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர். இதையடுத்து தலைமை பொறியாளர் தட்சிணாமூர்த்தி சிதம்பரம, காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடைபெற்றுவரும் நீர்வழி திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story