தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்


தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2021 6:23 PM GMT (Updated: 13 Feb 2021 6:23 PM GMT)

சிங்கம்புணரியில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி சுந்தர நகர் மக்கள் மன்றத்தில் தே.மு.தி.க. தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வந்தவர்களை நகரச் செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ராமதாஸ், காளாப்பூர் ஒன்றிய கவுன்சிலர் உமா சோனைமுத்து ஆகியோர் வரவேற்றனர்.கூட்டத்தில் மண்டல தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகபுரம் மோகன்ராஜ் பேசும் போது, கட்சி தொண்டர்கள் தலைமை உத்தரவுக்கு இணங்க செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் தேர்தல் பணிக்குழு செயலாளர் தங்கமணி, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஜாகிர் உசேன், தொகுதி பொறுப்பாளர் துரை பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் கண்ணன், மாற்றுத்திறனாளி செயலாளர் வாஞ்சிநாதன், நகர அவைத்தலைவர் கருப்பையா, பொருளாளர் பிரபு, ஒன்றிய அவைத்தலைவர் வீரபத்திரன் ஒன்றிய பொருளாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story