பட்டாசு ஆலைகளில் கைத்தறி ஆடைகள் அணிந்து பணியாற்ற வேண்டும்


பட்டாசு ஆலைகளில் கைத்தறி ஆடைகள் அணிந்து பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 14 Feb 2021 1:23 AM IST (Updated: 14 Feb 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

உயிர் இழப்பை தடுக்க பட்டாசு ஆலைகளில் கைத்தறி ஆடைகள் அணிந்து பணியாற்ற வேண்டும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

தாயில்பட்டி, 
உயிர் இழப்பை தடுக்க பட்டாசு ஆலைகளில் கைத்தறி ஆடைகள் அணிந்து பணியாற்ற வேண்டும் என அதிகாரி ஒருவர் கூறினார். 
கைத்தறி ஆடைகள் 
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 
வெடிபொருள் கட்டுப்பாட்டுதுறை சார்பில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் கட்டாயம் கைத்தறி ஆடைகளையே அணிந்து வர வேண்டும் என்ற விதிமுைற உள்ளது. ஆனால் பெரும்பாலான ஆலைகளில் கைத்தறி ஆடைகளை அணிவதை கட்டாயப்படுத்தாததால் பெண் தொழிலாளர்கள் அதிகம் பலியாகின்றனர்.
கண்காணிக்க வேண்டும் 
 கைத்தறி ஆடைகளை உடுத்தினால் காயத்துடன் உயிர் பிழைக்க முடியும். இதனை தொழிலாளர்கள் உணர வேண்டும். பட்டாசு ஆலை உரிமையாளர்களும் முறையாக அதனை கண்காணிக்க வேண்டும்.
இதனை கண்காணித்தால் காயத்துடன் தொழிலாளர்களை காப்பாற்றி இருக்கலாம்.  இனிமேலாவது பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பெண் தொழிலாளர்கள் கைத்தறி ஆடைகளை அணிய வற்புறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story