மாவட்ட செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை + "||" + Farmer commits suicide by drinking poison

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

விவசாயி விஷம் குடித்து தற்கொலை
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டை அருகே கை.களத்தூர் பாதாங்கியை சேர்ந்தவர் ராமுலு (வயது 60). விவசாயி. குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்தை நிறுத்த முயற்சித்து முடியாத காரணத்தால் மனமுடைந்த ராமுலு நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உளுந்து பயிரில் பரவும் மஞ்சள் தேமல் நோய்
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பரவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2. உர விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்; “விவசாயிகள் வாழ்வுடன் மத்திய அரசு கண்ணாமூச்சி விளையாடுகிறது”
உர விலை உயர்வக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், விவசாயிகள் வாழ்வுடன் மத்திய அரசு கண்ணாமூச்சி விளையாடுவதாகவும் கூறியுள்ளார்.
3. கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
4. விஷம் குடித்து விவசாயி சாவு
நெல்லையில் விஷம் குடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
5. நெல்லையில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு
நெல்லையில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.