காஞ்சீபுரத்தில், குளத்தில் குதித்து பெண் தற்கொலை


காஞ்சீபுரத்தில், குளத்தில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2021 8:12 AM IST (Updated: 14 Feb 2021 8:12 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளத்தில் நேற்று காலை ஒரு பெண்ணின் உடல் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த பெண் காஞ்சீபுரம் வெள்ளைக்குளம் பகுதியை சேர்ந்த பூங்கொடி (வயது 48) என்பது தெரியவந்தது.

அவர் கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவதிக்குள்ளாகி இருந்தார் என்பதும் மனவருத்தத்தில் இருந்த அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

பூங்கொடியின் மகன்கள் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை அழைத்து் செல்ல இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story