வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் நினைவிடத்தில் அஞ்சலி


வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் நினைவிடத்தில் அஞ்சலி
x
தினத்தந்தி 14 Feb 2021 11:59 PM IST (Updated: 14 Feb 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தா.பழூர்:
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் உடல் சிதறி இறந்தனர். இந்த சம்பவத்தில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனும் வீர மரணம் அடைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதைெயாட்டி கார்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது மனைவி காந்திமதி, குழந்தைகள் சிவமுனியன், சிவமதி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஆனால் இந்த ஆண்டு அவரது நினைவு தினத்தன்று அரசு அதிகாரிகளோ, முன்னாள் ராணுவ வீரர்களோ கலந்து கொள்ளாதது வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
1 More update

Next Story