காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா 17-ந்தேதி தொடங்குகிறது


காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா 17-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 Feb 2021 5:45 AM GMT (Updated: 15 Feb 2021 5:45 AM GMT)

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா 17-ந்தேதி தொடங்குகிறது.

காஞ்சீபுரம், 

உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று முதல் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

விஸ்வரூப தரிசனம்

வருகிற 21-ந்தேதி தங்கப்பல்லக்கு அன்றிரவு நாக வாகனம், 23-ந்தேதி ரத திருவிழா, 25-ந்தேதி ஆள் மேல் பல்லக்கு, அன்று இரவு வெள்ளி ரத திருவிழா, 28-ந்தேதி காலை விஸ்வரூப தரிசனம் அன்று இரவு விடையாற்றி திருவிழாவுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்ரீகாரியம் சால்ல விஸ்வநாத சாஸ்திரி, கோவில் நிர்வாக அதிகாரி (கூடுதல் பொறுப்பு) என்.தியாகராஜன், நிர்வாக அலுவலர் நாராயணன் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Next Story