மாவட்ட அளவிலான சீனியர் நெட்பால் போட்டி


மாவட்ட அளவிலான சீனியர் நெட்பால் போட்டி
x
தினத்தந்தி 15 Feb 2021 11:37 PM IST (Updated: 15 Feb 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் மாவட்ட அளவிலான சீனியர் நெட்பால் போட்டி நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட அளவிலான 6-வது சீனியர் நெட்பால் போட்டி ஜெயங்கொண்டத்தில் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு நெட்பால் கழக மாநில பொதுச் செயலாளர் பாண்டியன் கொடி ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். நெட்பால் கழக துணைத்தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினர். போட்டிகளில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. 
அரியலூர் மாவட்ட அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் ஜெயங்கொண்டம் பரப்ரம்மம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் முதலிடமும், ஆண்கள் பிரிவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரி அணி இரண்டாமிடமும், பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் உதயநத்தம் ஏ.பி.சி. கிளப் ஆகிய அணிகள் மூன்றாம் இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவுகளில் ஆலத்தியூர் வித்யாமந்திர்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், வரதராஜன்பேட்டை மதர்ஞானம்மாள் பெண்கள் கல்லூரி மற்றும் சின்னவளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய அணிகள் மூன்றாம் இடமும் பிடித்தன. மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
1 More update

Next Story