ராணிப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
x
தினத்தந்தி 16 Feb 2021 10:11 AM GMT (Updated: 16 Feb 2021 10:11 AM GMT)

ராணிப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் உதயகுமார், மாநில போராட்டக் குழு தலைவர் ரகுபதி, மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள நகை கடன், டிராக்டர், பண்ணை கடன் உள்ளிட்ட கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். ஜப்தி ஏலத்தை உடனே நிறுத்த வேண்டும், சிப்காட் பகுதியில் பல வருடங்களாக தேங்கியுள்ள குரோமேட் கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் மனு அளித்தனர்.


Next Story