சட்டப்பணிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்


சட்டப்பணிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 Feb 2021 6:38 PM IST (Updated: 16 Feb 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

சட்டப்பணிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை, பிப்.17-
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அறந்தாங்கி, கீரனூர், திருமயம் மற்றும் ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் ஆணை குழுக்களுக்கு, சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக, சமூக சேவை மனப்பான்மையுடன், ஊதியமின்றி பணிபுரிய தன்னார்வ தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சட்டபணிகள் தன்னார்வ தொண்டர்கள் சேர்க்கைக்கு ஆசிரியர்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்பட), ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபிள்யூ பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக சேவை புரியும் சமூக ஆர்வலர்கள் (அரசியல் அமைப்புசாராத தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்), மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். சமூக சேவை மனப்பான்மையுடன், ஊதியமின்றி பணிபுரிய மேற்கண்ட பிரிவுகளில் விருப்பமுள்ளவர்கள், வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் தங்களது அருகாமையிலுள்ள நீதிமன்றங்களில் இயங்கி வரும் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அறந்தாங்கி, கீரனூர், திருமயம் மற்றும் ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழுக்களில் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று, பாஸ்போர்ட் புகைப்படத்துடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் மார்ச் 15-ந் தேதிக்குள் செயலாளர், சார்பு நீதிபதி, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு அலுவலகம், புதுக்கோட்டை-622001 என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஏ.அப்துல் காதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story