விரைவில் தேர்தல் பிரசாரம் தொடங்குவேன்


விரைவில் தேர்தல் பிரசாரம் தொடங்குவேன்
x
தினத்தந்தி 16 Feb 2021 4:07 PM GMT (Updated: 16 Feb 2021 4:07 PM GMT)

234 சட்டமன்ற தொகுதிகளிலும் விரைவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி:

தேர்தல் பிரசாரம்
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

கூட்டத்தில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். வருகிற 2022-ம் ஆண்டு அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு விழா நடக்க உள்ளது. 

அந்த கால கட்டத்திலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அ.தி.மு.க.வை இருக்குமாறு செய்ய வேண்டியது கட்சித் தொண்டர்களின் கடமை. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் விரைவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன். எனது பிரசார பயணம் வெற்றிப் பயணமாக அமையும்.

விரைவில் அரசாணை
தேனி மாவட்டத்தில் நீண்டகால திட்டங்களான ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு சுருளியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. 

அகமலை சாலை, குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேசன் செல்லும் சாலை உள்ளிட்ட சாலை திட்டங்களுக்கும் மதிப்பீடு தயார் செய்து இன்னும் 15 நாட்களில் அரசாணை வெளியிடப்படும். 

எதிர்க்கட்சியினர் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஆத்திரத்தில் பேசி வருகின்றனர். அதை நாம் கண்டுகொள்ள வேண்டியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story