திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் காரில் திடீர் தீ 4 பேர் உயிர் தப்பினர்

திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கார் திடீரென தீ பற்றி எரிந்தது. காரில் இருந்த 4 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
கருமத்தம்பட்டி
திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கார் திடீரென தீ பற்றி எரிந்தது. காரில் இருந்த 4 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
காரில் திடீர் தீ
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கோவை நோக்கி சென்று கொண்டு இருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்தது.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போராடி தீயை அணைத்தனர்
கருமத்தம்பட்டி மேம்பாலத்தின் மேல் இந்த விபத்து நடைபெற்றதால் தீயை அணைக்க முடியவில்லை. தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குதற்குள், தீ மள, மளவென பரவி கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
இருப்பினும் தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்பு எரிந்து நாசமான காரை சுங்க சாவடி நிர்வாகத்தினர் கிரேன் மூலம் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பனியன் கம்பெனி அதிபர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் வந்தவர் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பனியன் கம்பெனி அதிபர் ஆனந்தன் என்பது தெரியவந்தது.
இவர் தனது கம்பெனியில் வேலை செய்யும்பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை, அவர்களுடைய ஊருக்கு அனுப்பி வைக்க கணியூர் சுங்க சாவடி நோக்கி காரில் வந்துள்ளார். இரவு 9 மணிக்கு கருமத்தம்பட்டி நால்ரோடு மேம்பால பகுதியில் கார் வந்தபோது, காரின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
உயிர் தப்பினர்
இதனையடுத்து ஆனந்தன் உடனடியாக காரை நிறுத்தி இறங்கி வந்து பார்க்கும் போது தீ மளமளவென்று வேகமாக பரவி கார் பற்றி எரிய தொடங்கியது. உடனே தொழிலாளர்களை காரை விட்டு இறங்குமாறு கூறி உள்ளார்.
உடனே அவர்கள் கார் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.இந்த தீ விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story