வெள்ளகோவில் அருகே வெள்ளகோவில் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி 4 பேர் காயம்


வெள்ளகோவில் அருகே வெள்ளகோவில் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி 4 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Feb 2021 5:45 PM GMT (Updated: 2021-02-16T23:15:12+05:30)

வெள்ளகோவில் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.

வெள்ளகோவில், 
வெள்ளகோவில் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விபத்து 
வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம், ஒரத்துபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் மகேந்திரன் (வயது 18).  அதே ஊரை சேர்ந்த் செல்லமுத்து என்பவரது மகன் நிஷாந்த் (21) மற்றும்  ஜீவானந்தம் என்பவரது மகன் ராஜ் (20). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில்  மயில்ரங்கத்திலிருந்து வெள்ளகோவில் வழியாக காங்கேயம் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை நிஷாந்த் ஓட்டிச்சென்றார். அவருக்கு பின்னால் மகேந்திரனும், அதைத்தொடர்ந்து ராஜியும் அமர்ந்து இருந்தனர். அவர்களுடைய மோட்டார் சைக்கிள் வெள்ளகோவில் அருகே உள்ள ஒரு தனியார் கியாஸ் பங்க் அருகே சென்று கொண்டிருந்தது. 
வேன்- மோட்டார்சைக்கிள் மோதல்
அப்போது அவர்களுக்கு முன்னால் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.  எதிர்பாராத விதமாக அந்த வேன் வலது புறம் திரும்பியது. இதனால், நிஷாந்த் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அதே போல் வேனை ஓட்டி சென்ற நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த தனபால், மற்றும் வேனில் அமர்ந்து இருந்த மற்றொருவருக்கும் காயம் ஏற்பட்டது.
வாலிபர் பலி
இதையடுத்து அருகில் இந்தவர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த அனைவரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்்சை அளிக்கப்பட்டது. இதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேந்திரன் இறந்தார். 
பின்னர் நிஷாந்த் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், ராஜ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேன் டிரைவர் தனபால் மற்றும் வேனில் இருந்த மற்றொருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story