பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போலீசார் கொடி அணிவகுப்பு


பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 6:21 PM GMT (Updated: 2021-02-16T23:51:59+05:30)

மயிலாடுதுறையில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். 
கொடி அணிவகுப்பு
 மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவின்பேரில் நடந்த இந்த அணிவகுப்பு கார்டெக்ஸ் பகுதியில் தொடங்கியது. தொடர்ந்து பட்டமங்கல தெரு, கச்சேரி ரோடு, கண்ணார தெரு வழியாக திருவாரூர் சாலை கேணிக்கரை வரை நடந்தது. இதில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் மயிலாடுதுறை பகுதி போலீஸ் நிலையங்களின் போலீசார் என 150-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். 
பாதுகாப்பு கருதி
கொடி அணி வகுப்பை மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை வழிநடத்தி் சென்றார். மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாக போலீசார் கூறினர்.

Next Story